உலகக் கோப்பை இந்தியா சொதப்பல்


  1. பாண்ட்யா அவுட்

    சான்ட்னர் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஹர்டிக் பாண்ட்யா.
    அவர் 62 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
  2. தோனி காப்பாற்றுவாரா?

    ஆறாவது விக்கெட்டுக்கு ஹர்டிக் பாண்ட்யாவுடன் இணைந்துள்ளார் தோனி.
    56 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து பந்த் அவுட் ஆன பிறகு தோனி களமிறங்கினார்.
    இந்திய அணியின் பேட்ஸ்மென்களில் ஹர்திக் பாண்ட்யா, தோனி மட்டுமே தற்போது அவுட்டாகாமல் உள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் விழுந்தாலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் களமிறங்குவர்.
    நியூசிலாந்து அணி Vs தோனி (ஒருநாள் போட்டிகளில்)
    • போட்டி - 28
    • இன்னிங்ஸ் - 25
    • ரன்கள் - 890
    • அதிகபட்சம் - 84*
    • சராசரி - 49.44
    • ஸ்ட்ரைக் ரேட் - 83.33
    • சதம் / அரைசதம் - 0/6
    ஆசியாவுக்கு வெளியேயுள்ள அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்தபடியாக நியூசிலாந்துக்கு எதிராகத் தான் அதிக சராசரி வைத்துள்ளார் தோனி.
    அதே சமயம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகத்தான் குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
    நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் சதமடித்ததில்லை.
    2015 - 2019 உலகக்கோப்பைக்கு இடையே நியூசிலாந்துடன் 11 ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இதில் ஒரு போட்டியில் மட்டும் அரை சதமடித்துள்ளார்.
    ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிரான சேஸிங்கில் மூன்று முறை தோனி அரை சதம் விளாசியுள்ளார்.
  3. ரிஷப் பந்த் அவுட்

    மிச்சேல் சான்ட்னர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆனார் ரிஷப் பந்த்.
    டி கிரந்தோம் அவரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
    சான்ட்னர் 2 ஓவர்கள் இதுவரை வீசியுள்ளார். இரண்டும் மெய்டன்.
  4. 4 விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது இந்தியா

    முதல் பவர்பிளேயில் நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது இந்தியா.
    ரிஷப் பந்த் கொடுத்த கேட்சை நியூசிலாந்து வீரர் நீஷம் தவறவிட்டார்.
  5. மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது இந்தியா

    மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் ஆட்டமிழந்தார். மேட் ஹென்றி வீசிய பந்தில் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
  6. இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

    ஒரு ரன் எடுத்து ரோஹித் ஷர்மா அவுட் ஆகியிருந்த நிலையில், மூன்றாவது ஓவரில் கோலியும் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.
  7. அவுட் ஆனார் ரோஹித் ஷர்மா

    இரண்டாம் ஓவரில் ஒரே ஒரு ரன்னை எடுத்து அவுட் ஆனார் ரோஹித் ஷர்மா. இந்தியா இரண்டு ஓவர்கள் முடிவில் 5 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
  8. இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்கு

    நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்களை எடுத்துள்ளது.
    இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
    கிரிக்கெட்
  9. எட்டு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து

    நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை எடுத்துள்ளது. 48 ஆவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது நியூசிலாந்து அணி.
    கோலி
  10. மீண்டும் தொடக்கம்

    நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மழையால் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
  11. மழையால் ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது

    நான்கு மணி 21 நிமிட தாமதத்துக்கு பிறகு அந்த அறிவிப்பு வந்துவிட்டது.
    ஆம். மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
    நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது அதே நிலையில் ஆட்டம் தொடரும். மீதமுள்ள 3.5 ஓவர்களையும் நியூசிலாந்து எதிர்கொள்ளும்.
    இந்தியா அதன் பின்னர் சேஸிங்கை தொடங்கும்.
    ஒருவேளை மழை பெய்தால் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் அடிப்படையில் இந்திய அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்படும்.
    நாளை மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.
  12. Post update

    இன்று போட்டி தொடர்ந்தால், இந்தியா 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுக்க வேண்டும்.
    இன்று போட்டியைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் நாளை நியூசிலாந்து 46.1 ஓவர்களில் இருந்து ஆட்டத்தை தொடரும்.
  13. இன்னும் 20 நிமிடத்தில் நடுவர்கள் ஆய்வு

    பிரிட்டன் நேரப்படி மாலை 6.10க்கு மீண்டும் நடுவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    அப்போது 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தமுடியுமா என்பதை ஆய்வு செய்வர்.
  14. மழை நின்றது

    மான்செஸ்டரில் தற்போது மழை நின்றுள்ளது.
    களத்தில் இருந்து நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.