நியூஸிலாந்து அணி நிதானத் துடுப்பாட்டம்

  1. இந்தியா ஏழாவது முறையாக அரை இறுதி போட்டியில் விளையாடுகிறது.
  2. நியூசிலாந்து அணி எட்டாவது முறையாக அரை இறுதி போட்டியில் விளையாடுகிறது.
  3. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார்.
  4. நியூசிலாந்து அணியில் சவுத்தீக்கு பதிலாக ஃபெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
  5. இந்தியா இதுவரை மூன்று முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் அரை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறுகின்றதுடன், போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. 

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.100 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து

29-வது ஓவரில் நூறு ரன்களை கடந்தது நியூசிலாந்து.
மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி ரன் ரேட்டை உயர்த்தும் பணிகளில் இதுவரை ஈடுபடவில்லை.
நான்குக்கும் குறைவான ரன் ரேட்டில் விளையாடி வருகிறது கேன் வில்லியம்சன் அணி.
யுவேந்திர சாஹல் ஆறு ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்திருக்கிறார்.
ஹர்திக் பாண்ட்யா 6 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்திருக்கிறார். இதுவரை விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை.
29 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருக்கிறது நியூசிலாந்து அணி.


Advertisement