வேலைத்திட்டம்

(க.கிஷாந்தன்)
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலிக்கான வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கபட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்திஅமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் குறித்த கல்லூரிக்கு 07.07.2019. ஞாயிற்றுகிழமை வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார் எம்.ராம், சோஸ்ரீதரன்,அட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அட்டன் ஸ்ரீபாத கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த கல்லூரியின் பாதுகாப்பு வேலி அமைக்கநடவடிக்கை எடுக்கபட்டமை குறிப்பிடதக்கது.


--- Advertisment ---