இனிப்புச் சுவையுள்ள மென்பானங்களை அருந்துவதால் புற்றுநோய்க்கு வாய்ப்பு


நாளாந்தம் 100 மில்லிமீற்றர் இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களை அருந்துவோருக்கு புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் 18 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இனிப்பு சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களுக்கும் புற்றுநோய்களுக்கும் இடையில் நெருக்கிய தொடர்புகள் இருப்பதாகவும் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. 

இதனால் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். 

நாளாந்த சீனிப் பாவனையை பத்து சதவீதத்தை விட குறைக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைந்துள்ள நிலையில் புதிய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரச தகவல் திணைக்களம்