#பென்ஸ்டோக்ஸ் :தங்கள் தோல்விக்கு காரணமாக இருந்தவருக்கு விருது வழங்குமா நியூசிலாந்து?


உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு வெற்றிக்கனியை சுவைக்க காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸின் பெயர் விருது பெறுவோர் பட்டியல்களில் ஏற்கெனவே இடம்பெற தொடங்கிவிட்டார்.
ஆனால், நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் நாட்டில் இவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.
ஜீலை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து மக்களின் உள்ளங்கள் உடைந்துபோக காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டின் தலைசிறந்த நியூசிலாந்துக்காரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்,
மிகவும் பரபரப்பான கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆட்ட நாயகனாக 28 வயதான பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
பென் ஸ்டோக்ஸ்படத்தின் காப்புரிமைMIKE HEWITT/GETTY IMAGES
கிரிக்கெட் விளையாட்டில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், 12 வயதில் இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்னர், நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். இன்னும் சில நியூசிலாந்து மக்கள் அவரை தங்கள் நாட்டை சேர்ந்தவராகவே பார்க்கின்றனர்.
நியூசிலாந்துக்கு கணிசமான பங்களிப்பு அளித்து, நாட்டை பெருமை அடைய செய்தவருக்கு விருது வழங்க நியூசிலாந்து மக்கள் பெயர்களை பரிந்துரை செய்கின்றனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ்சனின் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பென் ஸ்டோக்ஸூக்கு சிறந்த போட்டியாளராக கேன் வில்லியம்சன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
கென் வில்லியம்சன்படத்தின் காப்புரிமைIDI
செப்டம்பர் மாதம் இந்த விருதுக்கான பெயர் பரிந்துரை முடிவடையும். பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இருந்து 10 பேர் நடுவர் குழு ஒன்றால் தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் மாதம் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதில் முதலிடம் பெறுபவருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விருது வழங்கப்படும்.