அரைஇறுதியில் இந்தியா,கபில்தேவ் முதல் தோனி வரை

அரை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதுவரை ஆறு முறை உலகக்கோப்பையில் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது. மூன்று முறை தோல்வியடைந்துள்ளது.
எந்தெந்த அரை இறுதிப் போட்டிகளில் என்ன முடிவு கிடைத்தது?

1983 - இந்தியா v இங்கிலாந்து

முடிவு - இந்தியா வெற்றி
மான்செஸ்டர் மைதானத்தில்தான் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதிப் போட்டியில் விளையாடியது.
அப்போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்தை எதிர்கொண்டது.
60 ஓவர்கள் கொண்ட அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து 213 ரன்களை குவித்தது.
கபில்தேவ்படத்தின் காப்புரிமைKARIM SAHIB
கபில்தேவ் 3 விக்கெட்டுகளையும் பின்னி மற்றும் அமர்நாத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி 55-வது ஓவரில் வென்றது.
கவாஸ்கர் 25 ரன்களிலும் ஸ்ரீகாந்த் 19 ரன்களிலும் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. ஆனால் அமர்நாத் 92 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் எடுத்தார். யஷ்பால் சர்மா 115 பந்துகளில் 3 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 61 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சந்தீப் பாட்டீல் 32 பந்துகளில் 8 பௌண்டரிகள் விளாசி 51 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
Presentational grey line

1987 - இந்தியா v இங்கிலாந்து

முடிவு - இங்கிலாந்து வெற்றி
இம்முறை போட்டியை நடத்திய இந்தியா சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடந்தது.
83-ல் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்த்துக்கொண்டது.
கிரகாம் கூச்படத்தின் காப்புரிமைJACK KAY
டாஸ் வென்ற இந்தியா ஃபீலடிங்கைத் தேர்ந்தெடுத்தது.
கிரகாம் கூச்சின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து இங்கிலாந்து.
இந்திய அணி ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது கவாஸ்கர் அவுட் ஆனார். ஸ்ரீகாந்த் 31 ரன்களில் திருப்திப்பட்டார்.
அசாருதீன் 74 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். கபில் தேவ் 22 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். கடைசி ஆளாக ரவி சாஸ்திரி 21 ரன்களில் அவுட் ஆனார்.
219 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது இந்தியா. இங்கிலாந்து அணித் தரப்பில் ஹெம்மிங்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
Presentational grey line

1996 - இலங்கை v இந்தியா

முடிவு - இந்தியா தோல்வி
இந்திய ரசிகர்கள் மறக்க வேண்டும் என நினைக்கும் போட்டி இது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய களேபரத்தால் போட்டி பாதியில் நின்றபோது நடுவர் இலங்கை வென்றதாக அறிவித்துவிட்டார்.
டாஸ் வென்ற இந்திய அணி சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தது.
ஆட்டத்தின் துவக்கத்திலேயே கலுவிதரனாவை வீழ்த்தினார் ஸ்ரீநாத். பின்னர் சனத் ஜெயசூர்யாவும் நடையை காட்டினார். இலங்கை அணி ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
அர்ஜுனா ரணதுங்கபடத்தின் காப்புரிமைMIKE HEWITT
குருசின்ஹாவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அரவிந்த டி சில்வா அதிரடியாக விளையாடத் துவங்கினார். பௌண்டரிகளில் பேசினார்.
47 பந்துகளில் 14 பௌண்டரி அடித்தார். 66 ரன்களில் வீழ்ந்தார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ஆட இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் எடுத்தது.
ஸ்ரீநாத் மூன்று விக்கெட்டுகளும் டெண்டுல்கர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் .
அசாருதீன் தலைமையிலான இந்திய அணி சேஸிங்கைத் துவக்கியது. சித்து 3 ரன்களில் வீழ்ந்தார். அதன் பின்னர் டெண்டுல்கரும், மஞ்சரேகரும் இணைந்து சரிவை தடுத்து நிறுத்தினர்.
டெண்டுல்கர் அபாரமாக விளையாடி அரை சதமடித்தார்.
88 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து டெண்டுல்கர் அவுட் ஆன போது ஸ்கோர் 98/2. அதன் பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
34.1 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ரசிகர்கள் கொந்தளிக்க மைதானத்துக்குள் புட்டிகள் வீசப்பட்டன, ஸ்டேடியத்தில் இருக்கைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
அப்போது 29 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் வினோத் காம்ளி. அன்று இரவு ஏற்பட்ட அமளியில் நடுவர் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாது எனக்கூறி இலங்கை வென்றதாக அறிவித்தார்.
இந்தியா 22 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த அந்த அரை இறுதிப் போட்டி, இந்திய ரசிகர்கள் மறக்க நினைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
Presentational grey line

2003 : இந்தியா vs கென்யா

முடிவு - இந்தியா வெற்றி
சச்சின் - கங்குலியின் சிறப்பான ஆட்டத்தில் இந்தியா எளிதாக கென்யாவை வென்றது.
2003 : இந்தியா vs கென்யாபடத்தின் காப்புரிமைMICHAEL STEELE
டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.
ஷேவாக் 33 ரன்களில் அவுட் ஆனார். சச்சின் 83 கைகள் எடுத்தார். கங்குலி அபார சதம் விளாசினார். அவர் ஐந்து பௌண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.
கென்யா அணி சேஸிங்கில் ஆரம்பத்திலேயே சொதப்பியது. 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது. அணித்தலைவர் டிகோலோ மட்டும் சதமடித்தார். 179 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது கென்யா.
ஜாகீர் கான் 9.2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Presentational grey line

2011: இந்தியா v பாகிஸ்தான்

முடிவு - இந்தியா வெற்றி
சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது முறையாக அரை இறுதிப்போட்டியில் அரை சதம் விளாசினார்.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சேவாக் பந்துகளை பௌண்டரிக்கு விரட்டிக் கொண்டே இருந்தார்.
ஆறாவது ஓவரில் சேவாக் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 48.
அதற்கடுத்தது வந்த வீரர்கள் யாரும் பெரிதாக நிலைத்து நின்று விளையாடவில்லை. கம்பீர் 27, தோனி 25 ரன்கள் எடுத்தனர். கோலி 9 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் டக் அவுட் ஆனார்.
2011: இந்தியா v பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைMANAN VATSYAYANA
ஒரு முனையில் டெண்டுல்கர் மட்டும் போராடினார். அதே சமயம் அவர் கொடுத்த கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தவறவிட்டனர்.
சச்சின் 115 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். அப்போது இந்தியா 41.4 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.
அந்நிலையில், பந்துவீச்சாளர்களோடு இணைந்து சுரேஷ் ரெய்னா ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரது பொறுப்பான 36 ரன்களால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது.
பிறகு ஆட வந்த பாகிஸ்தான் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சண்டிகரில் நடந்த இப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்தியா.
சச்சின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பஞ்சாப் மண்ணில் பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்த அரை இறுதிப்போட்டி இந்திய ரசிகர்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒன்று.
Presentational grey line

2015: இந்தியா vs ஆஸ்திரேலியா

முடிவு - இந்தியா தோல்வி
ஆஸ்திரேலியாவின் அபார ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
சிட்னியில் நடந்த போட்டியில் பின்ச் 81 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 93 பந்துகளில் அபார சதமடித்தார்.
ஃபால்க்னர் 12 பந்தில் 21 ரன்களும் மிச்செல் ஜான்சன் 9 பந்துகளில் நான்கு பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 27 ரன்களும் விளாசினர்.
இந்திய அணித்தரப்பில் உமேஷ் யாதவ் மட்டும் நன்கு விக்கெட்டுகள் எடுத்தார்.
2015: இந்தியா vs ஆஸ்திரேலியாபடத்தின் காப்புரிமைWILLIAM WEST
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.
இந்திய அணி எந்தவொரு கட்டத்திலும் வெற்றிக்காக போராடவில்லை. 76 ரன் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்தியா 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
தோனி - ரஹானே இணை இந்திய ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கைத் தரும் விதமாக விளையாடியது. ஆனால் ரஹானே 44 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
தோனி அரை சதமடித்து தனி ஆளாகி போராடினார். இருப்பினும் 65 பந்துகளில் 65 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ரன் அவுட் ஆனார்.
வெறும் இரண்டு ரன்களுக்கு இந்தியா தனது கடைசி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. 44.2 ஓவர்கள் முடிவில் 231/6 என இருந்த ஸ்கோர், 46.5 ஓவர்கள் முடிவில் 233/10 என்றானது.

உலகக்கோப்பை ஒருநாள் தொடர்

சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை டி20 ஆகியவற்றை ஒப்பிடும்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீதம் குறைவாகவே இருக்கிறது.
இதுவரை ஆறு முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள இந்தியா மூன்று முறை மட்டும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
வெற்றி வீதம் - 50 %
அரை இறுதியில் அதிக வெற்றி வீதம் வைத்திருக்கும் அணிகள்
உலகக்கோப்பை ஒருநாள் தொடரை பொருத்தவரை ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் தோற்றதே இல்லை.
இதுவரை அரை இறுதியில் விளையாடிய 7 முறையும் வென்றுள்ளது.
இங்கிலாந்து 5 -ல் மூன்று முறை வென்றுள்ளது. வெற்றி வீதம் - 60%
நியூசிலாந்து அணி இந்தியாவை விட அதிக முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாடுகள்அரை இறுதி போட்டிவெற்றிவெற்றி வீதம்
ஆஸ்திரேலியா0707100%
இங்கிலாந்து050260%
வெஸ்ட் இண்டீஸ்040375%
இலங்கை040375%
இந்தியா060350%
பாகிஸ்தான்060240%
நியூசிலாந்து070114%
தென்னாப்பிரிக்கா0400%
தென்னாப்பிரிக்கா அணி தான் இதுவரை அரை இறுதியில் நான்கு முறை தகுதி பெற்றும் ஒரு முறை கூட வென்றதில்லை.
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் மூன்று முறை அரை இறுதியில் வென்றுள்ளன.


--- Advertisment ---