இடமாற்றம்


சேவை நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழு வின் அனுமதியின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு  இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பெண் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட உதவி பொலிஸ் அதிகாரிகள் 11 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 9 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 8 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது