ஆபாசப்பட நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்குவது ஏன்?


பல நூற்றுக்கணக்கான ஆபாசப்பட நட்சத்திரங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரபலங்கள் போல் அல்லாமல் தங்களுக்கு பாகுபாடு காட்டி ஒதுக்கி வைத்திருப்பதாக இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்ட பலரும் தெரிவிக்கின்றனர்.
நிர்வாணமாக அல்லது பாலியல் பற்றி எதுவும் பதிவிடாமலேயே, இன்ஸ்டாகிராமின் சமூக வரையறைகளை மீறியதாக இதன் உள்ளடக்கத்தை கண்காணிப்பவர்களால் தங்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக 1,300 பேர் தெரிவிப்பதாக கூறுகிறது அடல்ட் பெர்ஃபாமர்ஸ் ஆக்டர்ஸ் கிரிட் என்ற அமைப்பு.
" எங்கள் வாழ்க்கையை நடத்த நாங்கள் இந்த பணி செய்கிறோம் ஆனால் அது பிடிக்காதவர்கள் எங்களிடம் இந்த பாகுபாடை காட்டுகின்றனர்" என்கிறார் அடல்ட் பெர்ஃபாமர்ஸ் ஆக்டர்ஸ் கிரிட் அமைப்பை சேர்ந்த இவான்ஸ்.
இது போன்ற பதிவுகளுக்கு எதிராக தொடர்சியாக புகார் அளிக்கப்படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை என்கிறார்கள் வயதுவந்தோர் பதிவுகளை வெளியிடுவோர்.படத்தின் காப்புரிமை@SABRINATHEBUNNY
Image captionஇது போன்ற பதிவுகளுக்கு எதிராக தொடர்சியாக புகார் அளிக்கப்படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை என்கிறார்கள் வயதுவந்தோர் பதிவுகளை வெளியிடுவோர்.
இத்தகைய எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியவுடன், கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் பிரிதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இவ்வாறு நீக்கப்பட்டோரின் கணக்குகள் பற்றி மேல்முறையீடு செய்வதற்கு புதிய அமைப்புமுறை நிறுவப்பட்டது. இந்த கோடைக்காலத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன. வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடுவோரின் கணக்குகள் நீக்கப்படுவது தொடர்கிறது.
'இறந்த நட்சத்திரத்தின் பக்கம் நீக்கம்'
செப்டம்பர் மாதம் ஆபாசப்பட நடிகை ஜெசிகா ஜேமெஸ் இறந்த பின்னர் அவரது கணக்கு நீக்கப்பட்டது இவான்ஸை கோபப்படுத்தியது.
ஒன்பது லட்சம் பேருக்கு மேலானோரால் பின்தொடரப்பட்ட இந்த கணக்கு பின்னர் மீட்கப்பட்டது.
2019ம் ஆண்டு எக்ஸ்பிஸ் விருது விழாவின்போது ஜெசிகா ஜேமெஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption2019ம் ஆண்டு எக்ஸ்பிஸ் விருது விழாவின்போது ஜெசிகா ஜேமெஸ்
யாருக்கும் தெரியாத "ஒமிட்" என்கிற நிறுவனம் நூற்றுக்கணக்கான கணக்குகளை நீக்குவதற்கு காரணமாக அமைந்ததாக தன்னைதானே பறைசாற்றி பெருமைப்பட்டு கொண்டது.
இந்தப் பரப்புரை செய்து வந்தவர்களில் வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடுவோரும், பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளருமான ஜின்ஜர் பேங்ஸ் இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டவர்களின் முதலாவது நபராவார்.
"உங்களுடைய நேரத்தையும், முயற்சியையும் போட்டு உருவாக்கும் உங்கள் சமூக வலைதள பக்கம் மூன்று லட்சம் பேருக்கு மேலானோரால் பின்தொடரப்பட்டால், அந்த கணக்கு நீக்கப்பட்டுவிடும். விதிமுறைகளை நீங்கள் பின்பற்றி பதிவிட்டாலும் உங்கள் கணக்கு நீக்கப்படும்" என்கிறார் அவர்.
"வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடுவோரையும், பாலியல் தொழிலாளர்களையும் சமூக வலைதளத்தில் இருந்து அகற்றிவிடுவது என்பது இந்த நபர்களுக்கு இருக்கின்ற முக்கியமான, ஒரேயொரு சந்தைப்படுத்தும் வழியையும் நீக்கி பாகுபாட்டை உருவாக்குவதற்கு சமமாகும்."
"இது பற்றி புகார் அளிப்பவர்களுக்கு மக்களின் வருவாய் பாதிக்கப்படுவது பற்றி புரியாது. அது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் இத்தகைய தொழிலை செய்யக்கூடாது அல்லது உயிர் வாழக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று ஜின்ஜர் பேங்ஸ் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கங்களை நீக்கிட காரணமாக இருந்ததாக ஆபாச படங்களுக்கு எதிரான ஒமிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்தின் காப்புரிமை@OMID91679072
Image captionஇன்ஸ்டாகிராம் பக்கங்களை நீக்கிட காரணமாக இருந்ததாக ஆபாச படங்களுக்கு எதிரான ஒமிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப புரட்சி

தொழில்நுட்ப புரட்சி ஆபாசப்பட தொழிற்துறையை உருமாற்றியுள்ளது. புதிய சேனல்களை திறந்துள்ளது. வெப் கேமரா இணையதளங்கள், சந்தா சேவைகள் மற்றும் தகவமைக்கப்பட்ட காணொளி தளங்களை பயன்படுத்தி பல ஆபாசப்பட நட்சத்திரங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் சுயாதீனமாக செயல்பட தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. தங்களின் தனிப்பட்ட பெயரை பிரபலமடைய செய்ய பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்துகின்றனர்.
வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடும் ஒருவர், புதிய காணொளி காட்சிகளை வெளியிடும்போது, அதனை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒருவரின் கணக்கு நீக்கப்படும்போது, ரசிகர்களோடு அவருக்கும் இருக்கு தொடர்பும், வியாபார தொடர்பும் துண்டிக்கப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு வருகின்ற வருவாய் குறைவதோடு, வாழ்க்கையும் பதிக்கப்படுகிறது.
பல பதிவுகள் கற்பனைக்கு சிலவற்றையே விட்டு செல்கின்றன. ஆனால், பதிவிடுவதற்கான வழிகாட்டு நெறிகள் தெளிவில்லாமலும், செயல்படுத்துவதில் தொடர்ச்சி இல்லாமலும் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.

ஆபாசப்பட நட்சத்திரங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை விட புகழ்பெற்ற பிரபலங்கள் அனுமதி பெறாமலேயே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிகவும் வெளிப்படையாக இருக்க அனுமதிக்கப்படுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
"உடல் தெரியக்கூடிய புகைப்படங்கள் எதையும் நான் இன்ஸ்டாகிராமில் வெளியிடவில்லை. நான் லெக்கின்ஸ் அணிந்திருக்கும் புகைப்படம் கூட ஒரு சிலரின் உணர்ச்சிகளை தூண்டுவதாக அமையலாம். அதனை பற்றி யாராவது புகார் அளிக்கலாம். எது கலை, எது ஆபாசம் என்பதை இந்த தொழில் முடிவு செய்யட்டும். பின்னர் எங்களை தண்டிக்கட்டும் என விட்டுவிடுகிறோம்" என்கிறார் ஜின்ஜர் பேங்ஸ்.

ஃபேஸ்புக்கின் பதில்

"உலக அளவில் பல்வேறுப்பட்ட சமூக வேற்றுமைகள் நிலவுகையில், இதில் வெளியாகும் உள்ளடக்கங்கள் அனைவருக்கும் பொருத்தமானவைகளாக இருப்பதை உறுதி செய்துகொள்ள நிர்வாணம், பாலியல் தோழமை ஆகியவற்றுக்கு விதிகளை போட வேண்டியதாயிற்று" என்று இன்ஸ்டாகிராமை வைத்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.
"இந்த விதிகளை மீறுவதாக இருந்தால் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். அதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்குகின்றோம். தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், அந்த கணக்கு மீட்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கின் சமீபத்திய சமூக வழிகாட்டு நெறிகள், நிர்வாண புகைப்படங்கள், பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் பாலியல் அரட்டை போன்றவற்றை பொதுவான பாலியல் இமோஜிகளை, பாலியல் ரீதியான வட்டார வழக்குகளை, பிற உள்ளடக்கம் அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி வழங்கவோ, கேட்கவோ முடியாது என்று தெரிவிக்கின்றன.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பொதுவாக பயன்படுத்தப்படும் பாலியல் தோழமையை குறிப்பிடும் இமோஜிகளை பயன்படுத்த கூடாது. ramபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பொதுவாக பயன்படுத்தப்படும் பாலியல் தோழமையை குறிப்பிடும் இமோஜிகளை பயன்படுத்த கூடாது.
இந்த வழிகாட்டு நெறிகளை செயல்படுத்த கண்காணிப்போர் பயன்படுத்தும் விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. நீதி, நியாயம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ள உலகில், மிகவும் பிற்போக்குவாதிகள் ஏற்றுகொள்ள கூடியதாக தன்னை ஃபேஸ்புக் நிலைநிறுத்துகிறதோ என்று பாலியல் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
இதனை தரம் தாழ்ந்த கண்காணிப்பு முறை என்கிறார் வயதுவந்தோர் பொழுதுபோக்கு இதழியலாளரும், எக்ஸ்பிஸ் வெளியீட்டு நிறுவனத்தில் செய்தி பதிப்பாசிரியருமான குஸ்தாவோ டர்னர்.

வலையில் பிடிப்பட்ட கலை

வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை பதிவிடுவோரும், பாலியல் தொழிலாளர்களும் மட்டுமே இதில் பாதிக்கப்படவில்லை. நியூ யார்க்கில் லெஸ்லி-லோஹ்மன் அருங்காட்சியகத்தில் "குயீர் செக்ஸ் ஒர்க்கின் ரெவெலூசனரி ஆர்ட்" என்கிற கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததால் எழுத்தாளரும், கவிஞரும், கலைஞருமான ரேச்சல் ரபிட் ஒயிட் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கமும் நீக்கப்பட்டது.
An Instagram post showing protests outside the company's London headquartersபடத்தின் காப்புரிமை@UNITEDSTRIPPER
கோடை காலத்தில் "போல் டான்சர்" போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிடப்பட்ட உள்ளடக்கங்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், பின்னர் மன்னிப்பு கோரி அதன் கொள்கையை மாற்றி கொண்டது. ஆனாலும், தனது விதிமுறைகளுக்கு எதிராக பதிவிடப்படும் மற்றும் பகிரப்படும் உள்ளடக்கங்களை, ஹேஷ்டேக்குகளை இது தடை செய்கிறது. கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இது தீவிரமான தணிக்கை என்கின்றனர் விமர்சகர்கள். இதனால், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் கல்வி அளிப்போர் மற்றும் போல் நடனமாடும் சமூகம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
புகழ்பெற்ற பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை பதிவிடும்போது, பிகினி உடையில் தங்களின் காணொளியை பதிவிட முடியவில்லை. உங்களுக்கு ஆதரவு அளிக்கப்படவில்லை. நீங்கள் செய்வதற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது" என்கிறார் போல் நடன பெண் கலைஞர் ஒருவர்.