ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்


ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற உடனடியாக தனது மருத்துவரை அணுகினார். பரிசோதனையில் அந்த கட்டியின் ஆபத்தை அறிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.
மே மாதம் கண்டறியப்பட்ட இந்த புற்று நோய் கட்டி அகற்றப்பட்டு தற்போது இந்த முதியவர் நலமுடன் வாழ்கிறார்.
பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் மிக அறிதாகவே தாக்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் 390 ஆண்களும் 54,800 பெண்களும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக பிசோதனையில் தெரியவந்தபோது நானும் என் மனைவி ஹெலனும் மிகுந்த மண வருத்தத்திற்கு ஆளானோம்'' என்று கூறுகிறார் கிட்சிங்.
வின்ஸ் கிட்சிங்
Image captionவின்ஸ் கிட்சிங்
வேல்ஸ்சில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அன்றே வீடு திரும்பும் அளவிற்கு உடல் நிலை தேறியதாக கூறுகிறார். அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்த வலியும் ஏற்படவில்லை. நான் மிகவும் அதிஷ்டசாலி என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு பிறகு கிட்சிங்கிற்கு புற்றுநோய் மேலும் பரவவில்லை என்றும் மேலதிக சிகிச்சை தேவையில்லை என்றும் அவரின் அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்து செய்தி கிடைத்துள்ளது.
''எவ்வளவு நாட்களாக அந்த கட்டி இருந்தது என்று கூட எனக்கு தெரியாது, நான் என் மார்பகத்தை பெரிதாக கவனித்ததில்லை. மேலும் பல ஆண்களுக்கு தெரிந்தது போல, உடலின் அனைத்து பாகங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது. ஆண்களை மார்பக புற்றுநோய் தாக்கும் என நான் கேள்வி பட்டதே இல்லை. இதற்கு முன்பு என் குடும்பத்தினர் யாருக்கும் புற்று நோய் பாதிப்பு இல்லை. எனவே இந்த நோய் குறித்து நான் யோசித்ததே இல்லை.'' என்கிறார் கிட்சிங்.
மார்பக புற்று நோய் பெண்களை மட்டுமே தாக்கக்கூடிய நோயாக பலர் கருதுகின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்களையும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
அறுவை சிகிச்சை மருத்துவர் சியாரா சிரியன்னி.
Image captionஆண்களும் விழிப்போடு இருக்க வேண்டுமென சொல்கிறார் அறுவை சிகிச்சை நிபுணர் சியாரா சிரியன்னி
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் மார்பின் முலைக்காம்புகளுக்கு பின்னால் சிறிய அளவிலான கட்டியாக இந்த புற்றுநோய் கட்டி உருவாகிறது.
கிட்சிங்கின் அறுவை சிகிச்சை நிபுணர் சியாரா சிரியன்னி ஆண் மார்பக புற்றுநோயை "மிகவும் அரிதானது" என்று விவரித்தார், மேலும் ஆண்களை தாக்கும் மற்ற நோய்களுடன் ஒப்பிடுகையில், மார்பக புற்றுநோய் 1% தான் என்று கூறுகிறார்.
''ஆனால் ஆண்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். மார்பகத்தில் எதேனும் புதிய கட்டி , தோல் மாற்றங்கள் உருவானால் உடனடியாக உங்கள் மருத்துவரை நாடவேண்டும். '' என்றும் சியாரா எச்சரிக்கை விடுக்கிறார்.
மேலும் 95% ஆண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, மரபு ரீதியாக இந்த நோய் "குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினரை'' தாக்குகிறது என்றும் சியாரா குறிப்பிடுகிறார்