#அயோத்தி தீர்ப்பு: சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்; முஸ்லிம்களுக்கு மாற்று இடம்


அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி முஸ்லிம்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை என இந்திய நீதிமன்று அறிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ரானஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவு.

முக்கிய சாராம்சம்


  1. 1992ல் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுக்க பரவிய மதக் கலவரங்களில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
  2. ராமர் பிறந்த இடம் அந்த மசூதி உள்ள இடம்தான் என்றும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த முகலாயர்கள் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகவும் இந்து அமைப்புகள் கூறுகின்றன.
  3. 1949 டிசம்பரில் இரவு நேரத்தில் அந்த மசூதியில் ராமர் சிலையை சிலர் கொண்டுவந்து வைக்கும் வரையில், அந்த இடத்தில் தாங்கள் வழிபாடு செய்து வந்ததாக இஸ்லாமியர் தரப்பில் கூறுகின்றனர்.
  4. அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்தது.
  5. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.