கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை


ஸ்வீடனை சேர்ந்த 16 வயதான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடனின் நாடாளுமன்றம் முன்பு நடத்திய நீண்ட போராட்டம் முதல் ஆவேசம் நிறைந்த ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை வரை கிரேட்டா துன்பர்க்கின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
மேலும், உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான தங்களது குரலை திரளாக பதிவு செய்து வருவதற்கு கிரேட்டா முக்கிய காரணமாக அறியப்படுகிறார்.
பருவநிலை மாற்றத்துக்கெதிரான செயல்பாட்டில் இதுபோன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்த தனது மகள் கிரேட்டாவின் பணி குறித்து அவரது தந்தை வேறுபட்ட கருத்தை முன்வைத்திருக்கிறார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரின் "முன் வரிசையில்" தனது மகள் செல்வது "ஒரு மோசமான யோசனை" என்று தான் நினைத்ததாக கிரேட்டா துன்பெர்க்கின் தந்தை கூறியுள்ளார்.
கிரேட்டா தன்பர்க் தந்தை: "அவளுக்கு மகிழ்ச்சி; எனக்குதான் வருத்தம்"படத்தின் காப்புரிமைKENA BETANCUR/GETTY IMAGES
இதுகுறித்து பிபிசியுடன் பேசிய ஸ்வாண்ட் தன்பர்க், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்திற்காக தனது மகள் பள்ளியை தவிர்ப்பதற்கு அவர் "ஆதரவளிக்கவில்லை" என்று கூறினார்.
"எனது மகள் செயற்பாட்டாளராக உருவெடுத்த பிறகு முன்பை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால், அதே சமயத்தில் கிரேட்டா எதிர்கொள்ளும் "வெறுக்கத்தக்க" விமர்சனங்கள் என்னை வருத்தமடைய செய்கிறது."

''விமான பயணங்களை அறவே வெறுப்பவர் கிரேட்டா''

கிரேட்டாவையும் அவரது தந்தை துன்பர்க்கையும் நேர்காணல் செய்வதற்காக பிபிசி ஸ்வீடனுக்கு சென்றிருந்தது.
அப்போது கிரேட்டாவுக்கு பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராடும் குணம் எங்கிருந்து தொடங்கியது என்று அவரது தந்தையிடம் கேட்டோம்.
கிரேட்டா துன்பர்க்படத்தின் காப்புரிமைREUTERS/GUGLIELMO MANGIAPANE
Image captionகிரேட்டா துன்பர்க்
"சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிரேட்டா கடுமையான மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாள். ஒருகட்டத்தில் பேசுவதை நிறுத்தியதுடன், பள்ளிக்கு செல்வதையும் அவள் நிறுத்திவிட்டாள்" என்று கூறிய துன்பர்க், தனது மகள் உணவு சாப்பிடுவதை மறுத்ததை கொடுங்கனவு போன்று உணர்ந்ததாக மேலும் கூறினார்.
சூழ்நிலை மோசமடைய தொடங்கவே, அவரது பெற்றோர் தங்களது பணியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு கிரேட்டாவுடன் அதிக நேரத்தை செலவிட தொடங்கினர்.
"பிறகு நாங்கள் மருத்துவர்களின் உதவியை நாடினோம். அப்போதுதான், கிரேட்டா ஒருவித ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால்தான் தன்னால் "பல விடயங்களை முற்றிலும் வேறுபட்ட கோணங்களிலிருந்து பார்க்க முடிகிறது" என்று எனது மகள் கூறுவதுண்டு. இதன் பிறகுதான், கிரேட்டா பருவநிலை மாற்றம் தொடர்பான வியடங்கள் குறித்து பேசுவதுடன், அதுகுறித்து ஆய்வுகளிலும் ஈடுபட தொடங்கினாள்" என்று அவர் கூறுகிறார்.
கிரேட்டாவிடம் காணப்படும் சில குணாதிசயங்கள் தங்களிடமிருந்தே அவருக்கு சென்றதாக துன்பர்க் கூறுகிறார். உதாரணமாக, "கிரேட்டாவின் அம்மா விமான பயணங்களை அறவே வெறுப்பவர்; நான் வீகன் உணவுமுறையை பின்பற்றுபவன்."
சுற்றுச்சூலுக்கு ஏற்படும் பாதிப்பினால் விமான பயணங்கள் செய்வதை கிரேட்டா தவிர்ப்பதால், நியூயார்க், மாட்ரிட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளுக்கு தனது மகளை கடல் மார்க்கமாகவே அழைத்துச் சென்றார் அவரது துன்பர்க்.
கிரேட்டா தன்பர்க் தந்தை: "அவளுக்கு மகிழ்ச்சி; எனக்குதான் வருத்தம்"படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதுகுறித்து பேசிய துன்பர்க், "நான் செய்த இந்த விடயம் சரியான என்று எனக்கு தெரியும். ஆனால், உண்மையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக நான் இதை செய்யவில்லை, எனது மகளை காப்பதற்காகவே இதை செய்தேன். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருப்பதே எனக்கு முக்கியம்."
"தீவிரமான செயற்பாட்டாளராக மாறிய பிறகு, கிரேட்டா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். என்னைப் பொறுத்தவரை அவள் ஒரு சாதாரண குழந்தை; மற்றவர்களால் முடிந்த அனைத்தையும் அவளால் செய்ய முடியும். போலிச் செய்திகளின் மூலமாக கிரேட்டா பற்றி வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். ஆனால், அவற்றுக்கு கிரேட்டா தானாகவே சிறப்பான பதில்களின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்."
"எதிர்காலத்தில் நிலைமை இன்னும் சீராகும் என்று நம்புகிறேன். கிரேட்டாவுக்கு 17 ஆனவுடன் ஆவலுடன் நான் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அவள் சீக்கிரமே பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று துன்பர்க் மேலும் கூறினார்.

பிரிட்டன் தேர்தலின் போக்கை மாற்றிய கிரேட்டா

கிரேட்டா தன்பர்க் தந்தை: "அவளுக்கு மகிழ்ச்சி; எனக்குதான் வருத்தம்"படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த நேர்காணலின் ஒரு பகுதியாக, பிபிசியின் இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்களின் வாயிலாக பரவலாக அறியப்படும் இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோவுடன் கிரேட்டா காணொளி அழைப்பில் பேசினார்.
"பருவநிலை மாற்றத்துக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் எங்களை போன்ற பலர் அதில் தோல்வியடைந்த நிலையில், 16 வயதாகும் நீங்கள் பல விடயங்களை சாதித்துள்ளீர்கள்" என்று கிரேட்டாவிடம் டேவிட் அட்டன்பரோ கூறினார்.
அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், பருவநிலை மாற்ற விவகாரம் முக்கிய விவாத பொருளானதுக்கு கிரேட்டாதான் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உலகளாவிய இயக்கத்தை முன்னெடுத்த கிரேட்டா தன்பர்க், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.