குழந்தைகளின் கண்நலத்தைப் பாதுகாப்போம்!



இதுபோக ஜன்னல், மின்விசிறி, ஏசியில் ஒட்டியிருக்கும் தூசுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்கள், நகக்கண்களில் தேங்கியிருக்கும் அழுக்குகள், வீட்டைச் சுற்றி இருக்கும் பார்த்தீனியம் செடியின் மகரந்தத்தூள் இவையும் அலர்ஜியை ஏற்படுத்தும்.

நாள்பட்ட ஒவ்வாமையால் கண்ணின் மேற்படலம்(Conjunctiva) வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் கலந்த பிரவுன் நிறமாக மாறிவிடும். கண்ணின் வெளிப்புறத்தில் இருக்கும் கொழுப்பு(Orbital fat) கரைந்து கண்கள் குழிக்குள் இருப்பதைப் போல் ஒரு தோற்றம் இருக்கும். கருவிழியின் மேற்பரப்பு நிரந்தரமாக பாதிக்கப்பட்டு கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் வரலாம்.

இதைத் தடுக்க என்ன செய்யலாம்?


6 மாதத்திலிருந்து 5 வயது வரையிலான உள்ள சிறார்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு வைட்டமின் ஏ திரவத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அங்கன்வாடியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதைத் தவறாமல் குழந்தைக்கு அளிக்க வேண்டும். கேரட், கீரை, பப்பாளி, மீன் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். இவை தடுப்பு நடவடிக்கைகள்.

வைட்டமின் ஏ குறைபாடு கண்டறியப்பட்ட பின் என்ன செய்யலாம்?


மருத்துவர் ஆலோசனைப்படி ஊசி அல்லது மாத்திரை மூலமாக வைட்டமின் ஏ சத்தினை போதுமான அளவு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் உலர்வது முதல் கருவிழி பாதிப்பால் பார்வை இழப்பது வரை வைட்டமின் ஏ குறைபாட்டின் நிலைகள் பலவற்றைத் தடுக்கலாம். மருத்துவர் பரிந்துரையின்றி தானாக வைட்டமின்-ஏ மாத்திரைகளையோ மீன் எண்ணெய் மாத்திரை என்று கூறப்படுபவையையோ(Cod liver capsules) வாங்கி உண்ணுதல் தவறு.

நம் நாட்டில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை பேன் மற்றும் பொடுகுத் தொல்லை. அதுபோக என்னைப் பார்க்க வரும் அனைத்து குழந்தைகளிடமும் நான் முதலில் வலியுறுத்துவது கை விரல் நகங்களை சீராக வெட்டி சுத்தமாக வைத்திருப்பது.