தலைசிறந்த வழக்கறிஞர், அப்பழுக்கற்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவரத்தன மறைவு


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தன சற்று முன்னர் தனியார் வைத்தியசாலையில் காலமானார். பக்கச்சார்பற்ற, அதேவேளை அப்பழுக்கற்ற நீதியரசராக இவர் தொழிற்பட்ட நீதியரசர் இவர்.

கொழும்பு றோயல் கல்லுாரியில் கல்வி கற்று,கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டப்பட்டதாரியானார்.. தொழில்சார் சட்டத்தரணியாக தன்னை ஆக்கிக் கொண்ட இவர், குடியியல் சட்டம்,வங்கியியல் சடடம்,புலமைச் சொத்துச் சட்டம் என்பனவ்ற்றில் நிபுணத்துவ அறிவைப் பெற்றிருந்த இவர்,2012ம் ஆண்டில் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தவைராகப் 2012-2013ம் ஆணடு காலப் பகுதியில் பணிபுரிந்தார்.கொழும்புபப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரான இவர், 2016ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

2017ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற  மத்திய வங்கியின் பிணை முறிமோசடி ஜனாதிபதி விசாரணைக் குழுவில்,ஒரு அங்கத்தவராகத் தொழிற்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவினால் பிரதமரை நீக்கி,நாடாளுமன்றை உரிய காலத்திற்கு முன்னர் கலைத்தமை சட்ட விரோதமானது என மீயுயர் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதியவருள் இவரும் ஒருவர்.

இவரது தொழில்சார் அனுபவங்கள் காலவெள்ளத்தால் அள்ளிச் செல்லப்பட முடியாதவை.