திசாரா பெரேரா,இராணுவத் தொண்டர் படையணியில்



போட்டி முழுக்க முழுக்க நியூசிலாந்து பக்கம் இருந்த நேரத்தில், அந்த அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார் திசார பெரேரா 2019 ஜனுவரித் திங்களில்.இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இவர் கஜபா படைப் பிரிவில் மேஜராக இணைந்துள்ளார்.

திசாரா பெரேரா வத்தலா புனித அந்தோணி கல்லூரியில் பட்டம் பயின்ற போது இவர் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் பின்னர் அவர் கொழும்பின் புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார், இது இலங்கை துடுப்பாட்ட வீரர்களான சமிந்த வாஸ்ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரை உருவாக்கியுள்ளது. 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல போட்டிகளிலும் கல்லூரிக் காலங்களில் பயின்றுள்ளார். மேலும் 2008 ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . நவம்பர் 2008 இல், கோல்ட்ஸ் துடுப்பாட்ட சங்கத்தில் முதல் தரத் துடுப்பாட்டப்போடிகளில் விளையாடினார்.[1] 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 19 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கையின் தேசிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் வீச்சாளரும் ஆவார்.