ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தது போல பொதுத் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும்


(க.கிஷாந்தன்)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் புதிய ஜனநாயக முன்னனி சார்பில் போட்டியிடுவோம். எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தது போலபாராளுமன்றத் தேர்தலிலும் தமது ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் எடுத்துக் காட்ட வேண்டும். இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாக்களித்து உதவ வேண்டும். நாம் வெற்றி பெற்று அமைச்சர்களாகி மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.
லிந்துல லசிக்க கலாசார மண்டபத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் சந்திப்பு 15.12.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற போது பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சங்கத்தின் உப தலைவரும் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினருமான வீ. சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சங்கத்தின் உபதலைவர் எம்.ராம்பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன்தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன்இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மலையக மக்களுக்கு என்னால் முடிந்தளவு உண்மையான சேவைகளை பெற்றுக் கொடுத்துள்ளேன். இதுவரை யாரும் செய்யாத வேலைத் திட்டங்களை செய்து காட்டியும் உள்ளேன். இனிமேல் எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  எவரும் அரசியல் ரீதியில் சேவை செய்யாமல் காலத்தைக் கழித்து மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் தெளிவாகவும் விழிப்பாகவும் இருக்கின்றார்கள்.
எனது பதவிக் காலத்தில் ஏழு பேர்ச் காணிதனி வீட்டுத் திட்டம்அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்கள்பிரதேச சபைகள் அதிகரிப்புபிரதேச செயலகங்கள் அதிகரிப்பு போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
அதேபோல்மலையக அபிவிருத்திக்கான அரசாங்கத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய நிறுவனமான அதிகார சபையை” பெற்றுக் கொடுத்துள்ளேன். அது வெறுமனே பெயர்ப் பலகையில் இருப்பதாக மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எமது காலத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரதேச சபைகளை அனுபவிப்பது போலஏனைய விடையங்களையும் அனுபவிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. அதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல விடயங்கள் நடக்கும் போது எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்வரவேற்போம்பாராட்டுவோம். மக்களுக்கு அநீதி நடக்கும் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
நாம் ஆட்சியில் இருந்த போதுஇந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம். இதற்கான பெயர்ப்பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதில் நாம் மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. அந்தப் பட்டியல் அடிப்படையிலேயே பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
   அதேபோல் வீடுகளை வழங்க எம்மால் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் யாரும் மாற்றத்தைச் செய்ய முடியாது. கை வைக்கவும் முடியாது. அதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்காது. எனவேநாம் திட்டமிட்டிருந்தபடி சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் வீடுகள் கிடைக்க வேண்டும். இதில் எமது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
    ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய சஜித் பிரேமதாஸ தோல்வி கண்டிருந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தோல்வி காணவில்லை. எமது மக்கள் ஒற்றுமையாக இருந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு பெரும்பான்மை வாக்குகளை அளித்திருந்தார்கள். நாடளாவிய ரீதியில் 55 இலட்சம் வாகுகளைப் பெற்றிருந்த சஜித் பிரேமதாஸ மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது.அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
   நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் புதிய ஜனநாயக முன்னனி சார்பில் போட்டியிடுவோம். எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தது போலபாராளுமன்றத் தேர்தலிலும் தமது ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் எடுத்துக் காட்ட வேண்டும். இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாக்களித்து உதவ வேண்டும். நாம் வெற்றி பெற்று அமைச்சர்களாகி மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார்.