முல்லைத்தீவு - நாயாறு கடலில் குளிக்கச் சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தந்தையின் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிறு (29) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றியவரை பார்ப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர்கள் சென்ற நிலையில் இன்று பிற்பகல் கடலில் குளிக்கச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் களனி - தலுகம பகுதியைச் சேர்ந்த வருண கமகே (55வயது) மற்றும் அவரது மகனான லபிது கமகே (16வயது) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் தந்தையின் சடலம் மீட்கப்பட்டு முல்லைதீவு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மகனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment