ஸஹ்றான் குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழப்பு


கொழும்பு சிறைச்சாலையில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த இளைஞரின் வீட்டுக்கு காத்தான்குடி பொலிசார் இன்று (13.12.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவித்துள்ளனர்.
காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல்(வயது18) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 21/4 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பத்தையடுத்து ஸஹ்றான் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களில் ஒருவராக மேற்படி இளைஞரும் கைது செய்யப்பட்டு கொழும்பில் வைக்கப்பட்டிருந்தார்.
மேற்படி இளைஞர் உயிரிழந்ததாக இன்று (13.12.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி பொலிசார் குறித்த இளைஞனின் வீட்டுக்கு அறிவித்துள்ளனர்.
இவரது சகோதரரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---