மலையக தியாகிகள் நினைவேந்தல்




(க.கிஷாந்தன்)
மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு 15.12.2019 அன்று தலவாக்கலை டெவோன் பிரதேசத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே இவ் நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தோட்ட தொழிலாளர் ஒருவர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின்னர் மலையக உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து மலையக தியாகிகளையும் பொது தினத்தில் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் 10ம் திகதி மலையக தியாகி நினைவேந்தல் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மலையக உரிமைகுரல் தலைவர் ராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஈரோஸ் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் ஜீவன் ராஜேந்திரன், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.