ASIAN YOUTH JUNIOR POWERLIFITIONG CHAMPIONSHIP-2019


மாவனல்லை பதுரிய மத்திய கல்லூரி மாணவனின் சாதனை.
மாவனல்லை பதுரிய மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் முஹமட் உமைர் கடந்த 27ம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கான ஆசிய இளைஞர் பளுதூக்கள் போட்டியில் (ASIAN YOUTH JUNIOR POWERLIFITIONG CHAMPIONSHIP-2019) இலங்கை சார்பாக பங்குபற்றி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் மாவனல்லை உயன்வத்தையை சேர்ந்த நிஹ்மத்துல்லா (ராஜா) ஜெஸ்மின் தம்பதிகளின் மூத்த புதல்வராவார்.
மேலும் இவர் 2019ம் ஆண்டுக்கான இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கள் போட்டியில் 16 வயதின் கீழ் பிரிவில் பங்கு பற்றி 110kg பளு தூக்கி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது