பாவனையாளர் பாதுகாப்புக்கான பயிலரங்கு

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லுாரியில் இன்று புதுமுக மாணவர்களுக்கான திசை முகப் பயிற்ச்சி இடம்பெற்றது. இதில் மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லுாரியின் ஒழுக்க விதிகள் பற்றி சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான எடுத்தியம்பினார்.
இதேவேளை, இன்றைய நிகழ்வின் ஒரு அங்கமாகபாவனையாளர் பாதுகாப்புத் தொடர்பான பயிலரங்கும் அங்கு இடம் பெற்றது.
இதில் பாவனையாளர் அதிகார சபையினைச் சேர்நத அதிகாரி விசாரணை அதிகாரி ஏ.எச்.எச்.எம்.நபார், மாணவர்களுக்கு, பாவனையாளர் பாதுகாப்புத் தொடர்பில் அறிவுரைகளை வழங்கினார். இவருடன் உதவி விவாரணை அதிகாரி ஜனாப். அஜ்மல் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
Advertisement