இந்தியாவின் முதல் 5G போன்

5G போன்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள Octocore Qualcomn Snapdragon 865 SoC புராசஸருடன் இது வெளிவரும்.
ரியல்மீ X50 Pro 5G
இந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட்போனை ரியல்மீ நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத், `X50 ப்ரோ 5G' என்ற இந்த போனை அறிமுகம் செய்துவைத்தார். `Speed of the Future' என்ற டேக்-லைனுடன் வெளிவந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனானது ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மீ X50 Pro
ரியல்மீ X50 Pro 5G
பச்சை (Moss Green) மற்றும் சிவப்பு (Rust Red) ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ரியல்மீ X50 ப்ரோ 5G. இரண்டு ப்ரன்ட் கேமராக்களும் நான்கு ரியர் கேமராக்களும் என இதில் மொத்தம் ஆறு கேமராக்கள். இந்த போனில் 0.27 நொடிகளிலே கைரேகையைக் கண்டறியும் உலகின் மிக அதிவேக ஃபிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் இருக்கிறது. மேலும் 5G போன்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள Octocore Qualcomn Snapdragon 865 SoC புராசஸருடன் இது வெளிவரும்.

என்ன ஸ்பெஷல்?

4G-யை விடவும் பத்து மடங்கு வேகம் கொண்ட இதன் 5G புராசஸர் நொடிக்கு 3.45 GB டேட்டாவை பதிவிறக்கம் செய்யும் செயலாக்கத் திறனைக் கொண்டது. இதன் 360° சரவுண்டு ஆன்டெனா அமைப்பில் 4G/5G-க்கு எட்டும், GPS மற்றும் WiFi-க்கென மூன்றும், NFC மற்றும் Bluetooth-கென்று தலா ஒரு ஆன்டெனாவும் பொருத்தப்பட்டுள்ளன.
ரியல்மீ X50 Pro
இது 90Hz அல்ட்ரா ஸ்மூத் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. மேலும், இதில் Dual Channel UFS 3.0 ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனால் இதற்குள் நடக்கும் ஃபைல் பரிமாற்றங்கள் மிகவும் வேகமாக இருக்கும். இதன் 65w SuperDart சார்ஜிங்கில், 35 நிமிடங்களில் முழு பேட்டரியும் (4200 mAh) சார்ஜ் ஆகிவிடும். இதனால் மூன்று நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்து 100 நிமிட வீடியோக்கள், நான்கு அழைப்புகள் மற்றும் 40 பாடல்களைக் கேட்க முடியும் என்கிறது ரியல்மீ. மேலும், இதன் பின்புறத்தில் 64MP மெயின் கேமரா, 8 MP Ultra Wide & Macro Lens, 12MP Telephoto Lens மற்றும் B&W Portrait Lens ஆகிய நான்கு கேமராக்கள் இருக்கின்றன. 32MP Wide Angle Lens மற்றும் 8MP Ultra Wide-angle Lens என முன்புறம் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. இவை Vlogging போன்றவற்றிற்கு இலகுவாகப் பயன்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவையாம்.
ஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019  #TechTamizha

விலை என்ன?

நான்கு வேரியன்ட்டுகள் கொண்ட இந்த போனின் தொடக்க விலை 37,999 ரூபாயாகும்.
விலை விவரம்:
6GB+128GB - 37,999 ரூபாய்
8GB+128GB - 39,999 ரூபாய்
12GB+256GB - 44,999 ரூபாய்
அறிமுகப்படுத்தப்பட்ட தினமான நேற்றே இதன் விற்பனையும் தொடங்கிவிட்டது. இதை ஃபிளிப்கார்ட் மூலமாகவோ ரியல்மீ இணையத்தளத்திலோ ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த வசதிகளுடன் தற்போதைய ஒன்ப்ளஸ் போன்களுக்கு நிச்சயம் இது டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் மார்ச் 5-ம் தேதி பிட்னஸ் பேண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருக்கிறது ரியல்மீ.


Advertisement