வடக்கு மாகாணத்தில், நியமனங்கள்

பட்டதாரிகளுக்கான நியமனம் எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 650 பேருக்குப் பின்தங்கிய பிரதேசங்களில் வடக்கு மாகாணத்தில்வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாவட்ட செயலர்களுக்கு நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.
நியமனம் வழங்கப்படும் அனைவரும் கல்வி அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டு அந்ததந்த மாவட்டங்களில் பின்தங்கிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரத்து 650 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 600 பேரும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 200 பேரும், முல்லைத்தீவு மாவட்டதுக்கு 350 பேரும், மன்னார் மாவட்டத்துக்கு 250 பேரும், வவுனியா மாவட்டத்துக்கு 250 பேரும் நியமிக்கப்படுவர் என்று தெரியவருகின்றது.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் தற்போது 3 ஆயிரத்து 800 பட்டதாரிகள் உள்ளனர். அவர்களில் ஆயிரத்து 650 பேருக்கே தற்போது நியமனம் வழங்கப்படவுள்ளது.


Advertisement