தொழிற்சங்க நடவடிக்கை

(க.கிஷாந்தன்)

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 26.02.2020 அன்று சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

அதிபர் – ஆசிரியர்களின் பல வருடங்களாக நீடிக்கும் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்க, தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காமையின் காரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், 26.02.2020 அன்று சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மலையகத்திலும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதோடு, சில ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளனர்.

அட்டனில் பொஸ்கோ கல்லூரி மற்றும் ஹைலண்ஸ் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.


Advertisement