எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் காலமானார்


எகிப்தின் அதிபராக 30 ஆண்டுகள் இருந்து சாதனை படைத்த ஹொஸ்னி முபாரக் (Hosni Mubarak) தமது 91 ஆம் வயதில் இன்று காலமானார்.

1981 ஆம் ஆண்டு எகிப்தின் நான்காவது அதிபராக பதவி ஏற்ற அவர் கடந்த 2011 ல் மேற்காசியாவில் பரவிய அரபு வசந்தம் என்ற மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து பதவியில் இருந்து விலகினார்.

பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹொஸ்னி முபாரக், அவற்றில் பல நிரூபிக்கப்படவில்லை என கூறி கடந்த 2017 ல் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் கெய்ரோவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அண்மை காலமாக உடல்நலம் குன்றிய அவருக்கு கெய்ரோ காலா ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.