7529 மரணங்கள், 184976 பேர் பாதிப்பு, ஒரு ட்ரில்லியன் பணம்



உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
வட கொரியாவை ஆளும் உழைப்பாளர் கட்சி தொடங்கப்பட்டு வரும் அக்டோபருடன் 75 ஆண்டுகள் ஆகின்றன. அதனால், அக்டோபருக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என கிம் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என அந்நாடு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதே நேரம் கொரோனா வராமல் தடுக்க விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
கொரோனா வட கொரியாவில் பரவும் பட்சத்தில் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். அந்நாட்டின் மிக மோசமான சுகாதார கட்டமைப்பினால் கொரோனாவை கையாள முடியாது.

ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனாவால் ஏற்படும் பாதிப்பிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க ஒதுக்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது, நாடே முடங்குகிறதா? Live Updatesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த நிதியானது அமெரிக்கர்கள் அனைவருக்கும் பிரித்து அளிக்கப்படும்.
அமெரிக்கா நிதித்துறை செயலாளர்ஸ்டீவின், இதில் 250 பில்லியன் டாலர்கள் நிதியைப் பிரித்து காசோலைகளாக அனுப்ப இருப்பதாகக் கூறி உள்ளார்.
ஒரு ட்ரில்லியன் நிதி என்பது பிரிட்டனின் மொத்த பட்ஜெட்க்கு சமமானது.
மக்களுக்கு வழங்கிய 250 பில்லியன் டாலர்கள் போக மீதி தொகை வானூர்தி நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு வழங்கப்படும்.
வணிக கடனாக 330 பில்லியன் பவுண்டுகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது பிரிட்டன்.
மீளும் பங்கு சந்தை
மீளும் பங்கு சந்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஆசிய பங்கு சந்தை மெல்ல மீண்டு வருகிறது. உலக நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள நிதி ஒதுக்கியதை அடுத்து ஆசிய பங்கு சந்தைகள் மெல்ல மீண்டு வருகின்றன.
முகமூடி அணியாமல் வரும் மக்களை பொது போக்குவரத்தில் அனுமதிக்கக் கூடாது என ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியர் கோரி உள்ளார்.