வேண்டுகோள்!



ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பொது மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்

நாட்டில் பரவி வரும் கொரோனா ஆபத்தை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் இணைந்து பள்ளிவாசல்களில் நடாத்தப்படும் கூட்டுத் தொழுகை ஜும்ஆத் தொழுகை, பயான் ஒன்று கூடல் நிகழ்ச்சிகள்ஆகியவற்றை தவிர்த்து பள்ளிவாசல்ளில் தனிமையாக தொழுதுவிட்டு செல்லுமாறு பொதுமக்களை வேண்டியுள்ளனர்.

மேலும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பள்ளிவாசல்களில் ஒன்று கூடி சமயக்கடமைகளில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவதோடு பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.
ஆகவே மறு அறிவித்தல் வரும் வரை அனைத்துப் பள்ளிவாசல்ளிலும் தனிமையாக தொழுதுவிட்டு செல்லுமாறு அன்பாக வேண்டுகிறோம்.

தகவல்:
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்.