நியமனம்



ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கொரோனா வைரஸை (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கம் 1090, ஸ்ரீ ஜயவர்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்காக குறித்த தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.