அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க ”செயல்திட்ட செயலமர்வு”



(ஏ.எம்.ஜெனீர்)
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க 2020ம் ஆண்டுக்கான ”செயல்திட்ட செயலமர்வு” அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் எம்.எம்.பஹீஜ் தலைமையில் இடம்பெற்றது.


அக்கரைப்ற்று எழுவான் கரைத் திடலில் இடம்பெற்ற இன்றையய சந்திப்பில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க வரலாறு பற்றி சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.எல்.ஏ.றசீத் எடுத்துரைத்தார்.


 இதேவேளை,  Work Plan 2020  நோக்கம் பற்றியும் அதில் சங்க அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்குமான  சமூகஞ்சார் கடப்பாடுகள் பற்றியும், சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் கருத்துரைத்தார்.

நவீன கருத்தியல் வாதங்களுக்கு எற்பவும் இணையத் தளத்தினுாடாகவும் சட்டஞ்சார் சேவைகளை அனைவரும் அடையக்கூடிய வசதிகளையும் வழங்க அக்கபை்பற்று சட்டத்தரணிகள் சங்கம் சஞ்சரிக்க வேண்டுமென, சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் திறனாய்வு செய்தார்.

இன்றைய மதிய போசனத்துடனான செயல்திட்ட செயலமர்வு சிறப்பாக அமையப் பெற்றுள்ளதை சிரேஸ்ட பிரதித் தலைவர் எஸ்.எம்.ஏ.கபுர் பாராட்டினார்.



குறுகிய கால இடைவேளையில் இன்றைய நிகழ்சி சிறப்புறச் செய்வதற்கு பக்க பலனாகத் தொழில்பட்ட அனைத்து அங்கத்தவைர்களுக்கும், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ஆர். ஆர்கிலா நன்றி தெரிவித்தார். பகல் போசண விருந்துகளுடன் இனிதே நிகழ்வுகள் நிறைவுற்றன.