"பிறந்த மண்ணால் பலருக்கு பெருமை. சிலரால் பிறந்த மண்ணுக்கு பெருமை""
"மகளே உன்னால்
எங்கள் மண் பெருமை கொள்கின்றது"
அக்கரைப்பற்று 7ஆம் பிரிவைச் சேர்ந்த தணிகாசலம் தர்சிகா
வைத்தியதுறைக்கான (( Passed Final MBBS in first class with distinctions in medicine, surgery, obstetrics and gynecology, and psychiatry in Faculty of medicine , University of Colombo) ) இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில் (First class) சித்தியடைந்து எமது மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் மூத்த புதல்வியான இவர் தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பயின்றதுடன் 2012ஆம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியில் துறையில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 4ஆம் நிலையினையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்திய துறையில் வைத்திய நிபுணராக
(Consultant) ஆக உயர்வு பெற்று எங்கள் மண்ணிற்கு சேவை செய்ய வேண்டும் என நமது மக்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.
வாழ்க வளர்க நம் மண்ணின் பெருமையினை உயர்த்துக.


Post a Comment
Post a Comment