பதவியேற்க 2000 கி.மீ., காரிலேயே சென்ற நீதிபதிகள்

புதுடில்லி: ஊரடங்கு காரணமாக விமானம், ரயில்சேவை இயங்காததால்,நீதிபதியாக பதவியேற்க இரு நீதிபதிகள் காரிலேயே 2000 கி.மீ. பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

latest tamil news



பம்பாய், மேகாலயா, ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் கடந்த 18-ம் தேதி நியமித்தது. இதன்படி பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி திப்னாகர் தத்தா, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக, பிஸ்வநாத் சமோதர், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக, முகமது ரபீக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து விமானம், ரயில் சேவை இயங்காததால், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள திப்னாகர் தத்தா, மேகாலயா நீதிபதியாக பதவியேற்க உள்ள பிஸ்வநாத் சமோதர் ஆகியோர் , நீதிபதியாக பதவியேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இரு நீதிபதிகளும் நாளை பதவியேற்க வேண்டிய சூழ்நிலையில் இவர்கள், காரிலேயே சுமார் 2000 கி.மீ பயணித்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement