மன்னாரில்,இன்று

மன்னாரில் ஊரடங்குச் சட்டம் இன்று (16) காலை தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் மன்னார் நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்தனர்.

மேலும் கடந்த 8 ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் கடந்த 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இன்றைய தினம் (16) மன்னார் நகரிற்கு வருகை தந்து தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

வழமையை விட இன்றைய தினம் (16) அதிகளவான மக்கள் மன்னாரிற்குள் வருகை தந்துள்ளனர்.

மேலும் மன்னாரில் உள்ள நகை அடகு வைக்கும் நிலையங்களில் அதிகளவான மக்கள் வரிசையில் நின்று தமது நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் சகல வித தொழில்களும் முடங்கியுள்ளமையினால் பொருளாதார ரீதியில் பாதீக்கப்பட்ட மக்கள் தமது நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

மேலும் மரக்கறி வகைகள் உற்பட பொருட்களுக்கு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக இன்றைய தினம் (16) மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சட்ட சடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வழமைக்கு மாறாக மரக்கறி விற்பனை நிலையங்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இராணுவமும், பொலிஸாரும் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர் லெம்பட்-


Advertisement