சமூர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய நபருக்கு,விளக்க மறியல்

#ST.Jamaldden,
அக்கரைப்பற்று நகர் பிரிவு 5 சமூர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய நபர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம், குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்றுப் பொலிசார் அக்கரைப்பற்று நீதிமன்ற  கௌரவ நீதிபதி ஹம்சா அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

பாதிக்கப்பட்ட நபரான குறித்த சந்தேக நபர்,வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தமது உத்தியோகபுர்வ கடைமையினைப் புரிந்த வேளையில்அவர் மீது,குறித்த சந்தேக நபரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால்,குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறும் பொலிசாரால் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement