கிழக்கில் தென்பட்டது


பாறுக் ஷிஹான்

பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(7) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும் கிழக்கு மாகாணத்தில்  மிகப் பிரகாசமான சந்திரனாக செம்மஞ்சள் நிறத்தில் தென்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை(8) மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை கிழக்கு மாகாணத்தின் பெரிய நீலாவணை ,மருதமுனை ,கல்முனை ,சாய்ந்தமருது ,நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று ,பகுதிகளில் மிகப்பிரகாசமாக சந்திரன் தென்பட்டதை அவதானிக்க முடிந்தது.

  இவ்வருடத்தின் மிகப் பிரகாசமான சந்திரனாக இது தென்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் 'சுப்பர் பிங்க்  மூன் என' இது அழைக்கப்படுகிற சந்திரன் தென்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரன் தனது சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகாக வரும்போது இந்த  'சுப்பர்  பிங்க் மூன்' தோன்றும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
 
ஏப்ரல் மாதத்தில் வரும்  சுப்பர் பிங்க் மூன் ஆனது. எக் மூன், பிஷ் மூன் எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.