சார்வரி புத்தாண்டையொட்டி(க.கிஷாந்தன்)

மலர்ந்திருக்கும் சார்வரி புத்தாண்டையொட்டி மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றன.

சார்வரி புத்தாண்டானது நேற்றிரவு 7.26 இற்கு பிறந்தது. இக்காலப்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததாலும், வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாலும் இந்து மக்கள் இல்லங்களுக்குள்ளேயே ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு - புத்தாண்டை  வரவேற்றனர்.

அத்துடன், ஆலயங்களில் குருமார்களின் தலைமையில் குறைந்தளவு பக்தர்கள் பங்கேற்புடன், சமூக இடைவெளியை பின்பற்றி பூஜைகள் நடத்தப்பட்டன.

இதன்படி அட்டனில் -  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில்,  பிரதம குருக்கள்,  பூர்ண சந்திராணந்த  தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (14.04.2020) இடம்பெற்றன.


Advertisement