அக்கரைப்பற்றில் கிருமித் தொற்று நீககம் #COVID19 நோயாளி இனங்காணப்பட்டார்

#S.M.IRSAATH.
அம்பாரை மாவட்டததில்,அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் முதலாவது கொரொனா தொற்றாளர் இனங் காணப்பட்டார். இவரது இரத்த மாதிரிகள்  மட்டக்களப்பில் பரிசோதனைக்கென நேற்று முன்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில் இன்று மாலை கிடைக்கப் பெற்ற முடிவுகள் இவருக்கு கொரொனா தொற்று இருப்பதை ஊர்ஜிதப் படுத்தியுள்ளது.இவர் தற்சமயம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி  வைக்கபட்டுள்ளார்.

குறித்த நபர், அண்மையில் சமய நிகழ்வு ஒன்றுக்காக வெளியுர் பிரதேசமொன்றுக்குச் சென்று வந்துள்ளார். இதேவேளை, இவரது குடும்பத்தவர்களுக்கும் இக் கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை, அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் தற்போது, கொரொன தொற்று நீக்க கிருமி நாசினிகள் விசிறப் படுகின்றதை  அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


Advertisement