எனது அரசசேவைக்கு அகவை முப்பத்து மூன்று அதைத்தாண்டி எதிர்வரும் 2020 05 10ல் ஓய்வுநிலைக்கு உரியவனாகின்றேன் இதனையொட்டியே அன்பான உங்களிடம் இதயம் திறந்து இயம்ப விரும்புகின்றேன்.
எனது அரச சேவையின் சிறிய படகு இலங்கையின் வடபுல மன்னார் கச்சேரியிலே 01 04 1987ல் வெள்ளோட்டம் ஆனது அக்கால இலங்கையின் அசாதாரண சூழலில் ஒன்பது மாதங்கள் அங்கே பணியாற்றக் கிடைத்தது அப்போது அங்கே அரச அதிபராய் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மர்ஹும் M M மக்பூல் அவர்கள் கடமையிலிருந்தார் யாழ் மண்ணின் மைந்தர்கள் உயரதிகாரிகள் உறவும் மன்னார் வாழ் மகிழ்வான நண்பர்கள் தொடர்பும் என்றும் என் நெஞ்சில் நீங்கா நினைவுகள்.
பின்பு 04 வருடங்கள் மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட காணிப்பதிவகத்தில் மாண்புடன் கடமை தொடர்ந்தது அவ்வேளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலால் மரணமடைந்தவர்களின் இறப்புக்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை அப்போதைய எனது மேலதிகாரியும் ஓய்வுநிலை வட கிழக்கு உதவிப் பதிவாளருமான உயர் திரு S முத்துக்குமாரன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் நான் மேற்கொண்டேன் எனது சிறப்பான துரித நடவடிக்கை தொடர்பில் பாராட்டி மட்டக்களப்பு பிரஜைகள் குழுவினரால் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரம் தொடர்பில் மகிழ்வுடன் உள்ளேன்.
பின்பு 03 வருடங்கள் கல்முனை காணிப்பதிவகத்தில் கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்தது
நாட்டில் பிரதேச செயலக நடைமுறை ஏற்படுத்தப்பட்டதன் நிமிர்த்தம் கல்முனை பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவிற்கு பொறுப்பான மேலதிக மாவட்டப் பதிவாளராக (ADR) 12 வருடங்களுக்கு மேலான காலம் கடமையாற்றியது கண்ணுக்குள் இன்னும் அப்பி இருக்கிறது.
அக்காலம் போர் மேகங்கள் வட்டமிட்ட பொறுப்பான காலம் அப்போது விவாக பிறப்பு இறப்பு பதிவுகள் கைகளாலே எழுதப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.
விண்ணப்பித்து பத்து நிமிடங்களுக்குள் பதிவுகளை வழங்கி மேலதிகாரிகளின் நன்மதிப்பையும் பொதுமக்களின் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டதை இவ்வேளையில் திருப்தியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.
2001ம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் உருவாக்கப்படும் வரை சாய்ந்தமருது நிர்வாகம் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழேயே இருந்து வந்தது.
2005ல் பதிவாளர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டேன்.
2007 07 05 - 2016 01 01 வரை கல்முனை காணி மாவட்டப் பதிவகத்திற்கு காணிப்பதிவாளராக நியமிக்கப்பட்டேன்.
இவ்வேளையில் என்னை ஆற்றுப் படுத்தி ஆலோசனைகள் வழங்கிய ஓய்வு நிலை மேலதிகப் பதிவாளர் நாயகம் உயர்திரு N சதாசிவ ஐயர் அவர்களை நன்றியுடன் நினைவு படுத்திக் கொள்கின்றேன்
நான் பொறுப்பேற்கும் போது காணிப்பதிவகத்தின் புறச்சூழல் உட்கட்டமைப்பு எவ்வாறிருந்தது பிரசித்த நொத்தாரிசுகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது அவற்றையெல்லாம் மாற்றி அமைப்பதில் நான் பல துன்பங்களையும் வேதனைகளையும் சந்தித்தாலும் சட்டத்தரணிகள் பிரசித்த நொத்தாரிஸ்மார்களின் நல்லுறவும் அபிமானமும் அன்பும் கிடைத்தது கூடவே பொதுமக்கள் நல்லபிப்பிராயமும் நாடிவந்தது
அவ்வேளை கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகமாக பதவி வகித்த N M நயீம் அவர்கள் என்னை தைரியப் படுத்தி தட்டித் தந்து ஊக்கமுடன் உற்சாகப்படுத்தி நான் அலுவலகத்தை அழகுபடுத்தி முன்னெடுக்க எனக்கு அரணாக இருந்தார்.இவ்வேளையில் அவரை தாராளமாக நினைவு கூர்கின்றேன்.
2016 ஜனவரி- மார்ச் வரை 03 மாதங்கள் நெல்வளம் கொழிக்கும் நிந்தவூர் மண்ணின் பிரதேச செயலகத்திலும் 2016 ஏப்ரல் தொடக்கம் 2019 ஏப்ரல் வரை 03 வருடங்கள் நன் மனம் நிறை நண்பர்கள் கொண்ட சந்தணக்காற்று வீசும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் ADR கடமைபுரிய காலம் வகுத்தது.
கடந்த 2019 05 10ம் திகதி தொடக்கம் சரியாக ஒருவருடம் மீண்டும் கல்முனை காணிப் பதிவகத்தில் காணி மாவட்டப் பதிவாளராக(RL&ADR) கடமையாற்றி ஓய்வுநிலைக்கு வரவிருக்கின்றேன்.
என் அந்திம சேவைக்காலத்தில் உலகையே உலுக்கும் "COVID19"கொறோனா தொற்று நம் நாட்டிலும் ஆட்கொண்டிருப்பது துரதிஸ்டம் நிறைந்த சோதனை என்பதை நினைக்கையில் மனம் வேதனை அடைகின்றது கிட்டத்தட்ட ஒருமாதகாலம் அலுவலக தொடர்பு அற்ற நிலையில் காலம் கழிந்தது.
எனது அரச பணிக்குள்ளான அகவையில் மக்களின் விவாக பிறப்பு இறப்பு தங்களின் சொத்துக்கள் பதிவிலும் அதிக காலம் ஈடுபட்டதை எண்ணி மனதிற்குள் ஒரு பேறாகவும் பதிவிடுகிறேன்.
எனதுசேவைக்காலத்தில் கிழக்கு வலய உதவிப் பதிவாளராக சிறிது காலம் செல்வி ஆனந்தி ஜெயரெட்ணம் அவர்கள் கடமை புரிந்தார்கள் அவர் சிறப்பான ஆலோசனை வழங்கியது மட்டுமல்லாமல் கல்முனை காணி மாவட்டப் பதிவகத்தை ஆழமாக நேசித்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
தற்போது கிழக்கு வலய உதவிப் பதிவாளராக கடமைபுரியும் திரு K திருவருள் அவர்களுடன் எனது கடைசி ஒருவருடத்தை கழிக்க முடிந்தது அவரும் எனது பணிக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருந்தார் மேலும் எனது கடமை தொடர்பில் திருப்தியுடனுள்ளார். அவருக்கும் நான் நன்றியுடையவனாகவுள்ளேன்
நான் இவ் அலுவலகத்தை 2007ல் பொறுப்பேற்கும்போது 46 பிரசித்த நொத்தாரிசுகள்/சட்டத்தரணிகள் இணைக்கப் பட்டிருந்தனர் தற்போது 157 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
பிரசித்த நொத்தாரிசுகள்/சட்டத்தரணிகள் பெரும்பாலானவர்கள் என்னுடன் அன்பு கலந்த மாண்பான உறவுடன் இருப்பதையிட்டு பெருமை கொள்வதுடன் மன மகிழ்ச்சியுடன் உள்ளேன்
என்மேல் அதிக வஞ்சம் கொண்ட முந்நாள் உத்தியோகத்தர் ஒருவரின் சூழ்ச்சியால் எனக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட திடீர் இடமாற்றத்தை இரத்துச் செய்வதில் அதீத செயற்பாடு காட்டி அமைச்சர்மூலம் இரத்துச் செய்து தந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த அறிமுக நண்பன் S M லாபீர் என்னுடையதும் எனது குடும்பத்தவர்களினதும் நன்றிக்குரியவராவார்(எல்லா வற்றிற்கும் இறைவனே போதுமானவன்)
முறையற்ற சம்பாத்தியம் மிகமிக இலகுவாக கிடைக்கப் பெறும் இடத்தில் ஒட்டு மொத்தமாக 10 வருடங்கள் கடமையாற்றி நீதியற்ற வருமானங்கள் பெற்று கொள்ளாமல் அதிலிருந்து விலகிச் செல்வதை எண்ணி பெருமகிழ்வும் ஆனந்தமும் அடைகின்றேன்
எனது சேவைக்காலத்தில் என்னுடன் சேவையாற்றிய விவாக,பிறப்பு ,இறப்பு பதிவாளர்கள் கௌரவ காதிநீதிவான்கள் மற்றும் உடன் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் அலுவலக உதவியாளர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரியப் படுத்துகின்றேன்.
மே மாத ஆரம்பத்தில் அதிக விடுமுறைகள் வந்துள்ளதால் எனது கடமையின் இறுதி நாளாக 06 05 2020 ஆகும்
எனதுகடமைக் காலத்தில் என்னால் தெரிந்தோ,தெரியாமலோ ஏதாவது சிறிய தவறுகள் மனக்கசப்புக்கள் நடந்திருந்தால் அதனைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள்என்ற நம்பிக்கையில் உங்களின் மேலான அன்பையும் உறவையும் விட்டுப் பிரிந்தும் பிரியாமல் செல்கின்றேன்..
பிரிவோம் பிரிந்தாலும்
மீண்டும் ஒருவகையில்
சந்திப்போம்...
அன்புள்ள
M. A ஜமால்முகம்மத்
காணி மாவட்டப் பதிவாளர்
கல்முனை
01 05 2020

Post a Comment
Post a Comment