முஸ்லிம் சமூகத்தின் பன்முக ஆளுமை கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி காலமானார்


இலங்கை முஸ்லிம்கள் கண்ட   தன்னிகரற்ற தனித்துவமான கலாநிதி ரமழானின் இறுதிப்பத்தில் இறை ஈடேற்றமும் விமோஷனமும் பெற்று இன்று 19/05/2020 வபாத்தாகியுள்ளார்.

ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம்களுள் கலாநிதி என்றாலே டொக்டர் ஷுக்ரி எனும் நிலைதான் இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் இதர சமூகத்திலும் காணபாபட்டது.

ஏன் உலக முஸ்லிம் அறிஞர்கள் கூட இலங்கை முஸ்லிம்களின் தலைசிறந்த புலமைத்துவ ஜாம்பவானாக கலாநிதி டொக்டர் ஷுக்ரியைத்தான் கொண்டாடினர்.

காலம் உருண்டோடி  அவரிடமே கற்றுத்தேர்ந்த பல  கலாநிகள் இங்கு இன்று உருவானாலும்

அவருக்கு நிகர் அவரே தான் 

அவரது சிந்தனைப்பங்களிப்புக்கும் காத்திரமான படைப்புக்கும் யாருக்கும் அருகில் செல்ல முடியாதளவு பரந்த அறிவுக்கடல் அவர்.

ஆய்வுமரபும் ஆழமும் அவருக்கே உரித்தான கைவந்த கலை.

கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளர்.

சிறந்த வாசகர்.

அத்தனைக்கும் மேலால் சிறந்த பண்பாடுள்ளவர்.

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்காக அவர் ஆற்றிய மறக்க முடியாத  வரலாற்றுப்பாத்திரம் 

 Muslims of srilanka

Avenues to Antiquity 
ஆவணம்.

 

இது தவிர  காலத்தால்  அழியாத 
காத்திரமான அறிவுப்பங்களிப்பை தனது பேச்சாலும் எழுத்தாலும்

தேசிய சர்வதேச மட்டங்களில் நிலைநாட்டியவர்.

ஒரே நேரத்தில் அரபிலும் ஆங்கிலத்திலும்
தமிழிலும் 
அட்சரம் பிசகாமல் சரளமாக பேசவும் எழுதவும் மொழிபெயர்க்கவும் கூடிய  அபார ஆற்றல் பெற்றவர்.

இலங்கை முஸ்லிம்களின் அறிவியல் மறுமலர்ச்சியில் தன் செல்வத்தால் போராடி ஷஹீதான ம்ஹூம் நளீம் ஹாஜியாரின் பெருத்த கனவுக்கு

தனது அறிவுக்கையளிப்பால், சிந்தனையால் உரம் சேர்த்து பேருவலை ஜாமியா நளீமியா கலாபீடத்தை தோற்றுவிப்பதில் காத்திரமான பங்களிப்பாற்றி

ஆயிரக்கணக்கான  மாணவர்களை உருவாக்கியவர்.

இஸ்லாமிய கலைகளில் கைதேர்ந்த நிபுணர்களை உருவாக்கிய பேராளுமை.

ரமழானின் இறுதிப்பத்தில் இறை ஈடேற்றமும் விமோஷனமும் பெற்று இன்று 19/05/2020 வபாத்தாகியுள்ளார்.

இந்த இழப்பு இலங்கைமுஸ்லிம்களும் இலங்கையர்களும் இனி ஒருபோதும் யாராலும் ஈடுசெய்யப்படவே முடியாத  இழப்பாகவே இது ஆக்கிவிடும்.

அவர் மறைந்தாலும் அவரது சிந்தனைகளும் எழுத்துக்களும் சாகாவரம் பெற்று வாழும் ஜீவசக்திகொண்டவை

அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு
உயர்ந்த சுவனத்தையும் ரைய்யான் வாயிலூடாக நுழையும் பாக்கியத்தையும் வழங்கட்டுமாக.

ஒளி வீசும் ஞானச்சடரான சூரியன் பட்டப்பகலொன்றில் எல்லோரும் பார்த்திருக்க இன்று அஸ்தமித்துவிட்டது.

இன்று வபாத்தான பேருவலை ஜாமியா நளீமியா பணிப்பாளர்
கலாநிதி 
M.A.M.ஷுக்ரி
குறித்து 
அவர் ஈன்றெடுத்த மல்வானை மாணவர்....

Ash: M.M.A.BISTHAMY