பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து 38 பேர் உயிரிழந்துள்ளனர்
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, அமிர்தசரஸின் ஊரக பகுதிகளில் பத்து பேரும், படாலாவில் ஒன்பது பேரும், தர்ன் தரனில் 19 பேரும் போலி மது அருந்தியதால் இறந்தனர். போலி மதுபான பயன்பாடு பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

Skip Twitter post, 1

End of Twitter post, 1

இதுதொடர்பாக எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போலி மதுபானங்கள், கலன்கள் போன்றவை மீட்கப்பட்டு அவை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த பிராந்தியத்தில் போலி மதுபான கும்பல்களின் செயல்பாடு முடக்கப்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும்" என்று அவர் மேலும் கூறினார்.Advertisement