தற்காலிகமாக மூடப்பட்டது

#RA.Pirsaath.
கொழும்பு − ஜிந்துபிட்டி பகுதியில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.


ஜிந்துப்பிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு
அழைத்து செல்லப்பட்டனர்.கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஜிந்துப்பிட்டி 123 ஆம் இலக்க தோட்டத்தை சேர்ந்த 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை பொது சுகாதார பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

#COVID19SL #COVID19 #coronavirus #SriLanka #jinthupitti #lockdown


Advertisement