மீன் வளர்ப்பு


(.சுகிர்தகுமார்)


அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வம் காட்டிவரும் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான மீன்குஞ்சுகளை தடாகத்தினுள் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் சிவபாதசுந்தரம் சுதாகரன் ஆலோசனைக்கமைய அமைக்கப்பட்ட தடாகத்தினுள்ளேயே கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள பிரிவினால் இலவசமாக வழங்கப்பட்ட மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு மீன்குஞ்சுகளை தடாகத்தினுள் விட்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வினை கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள் பிரிவின் திருக்கோவில் பிரதேச நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் இரா.அபராஜிதன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.