அக்கரைப்பற்றில், புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்

#ST.Jamaldeen.
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியிலமைந்துள்ள இடத்தில், புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் பௌத்த மதகுரு உட்பட எட்டுப்பேரையும் ஓகஸ்ட் மாதம் ஏழாம்  திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று பதில் நீதவான் எம்.ஐ.உவைசுர்ரஹ்மான் இன்று கட்டளையிட்டார்.

குறித்த சந்தேக நபர்கள் அக்கரைப்பற்றுப் பொத்துவில் வீதியிலுள்ள ஒரு இடத்தில், புதையல் தோண்டிய சந்தேகத்தில் இவர்களைக் கைது செய்து,இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
Advertisement