நேர்முகத் தேர்வு

 


(வி.சுகிர்தகுமார் ) 

 

  அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் அடிப்படை தகமை சான்றிதழ்களை பரிசீலனை செய்யும் நேர்முகத்தேர்வு பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் நேர்முகத்தேர்வு இடம்பெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையிலான பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் எம்;.பிரதீப் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் அடிப்படை தகமை சான்றிதழ்களை பரிசீலனை செய்யும் நேர்முகத்தேர்வினை நடாத்தியதுடன் நோமுகத்தேர்வின் ஒழுங்கமைப்பை நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா மேற்கொண்டிருந்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேநேரம் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பினை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் நிலையில் வடகிழக்கில் இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement