#சங்கமன்கண்டி; கப்பலில் இருந்து ஒருவர் மீட்பு

 
சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த நபரை விரைவில் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

MT New Diamond எனப்படும் குறித்த எண்ணெய் கப்பல் இன்று காலை விபத்திற்குள்ளானது.


கப்பலிலிருந்த ஏனைய அலவலக ஊழியர்கள் மற்றுமொரு கப்பலூடாக மீட்கப்பட்டுள்ளனர்.


இந்த கப்பல் விபத்திற்குள்ளானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


கப்பலுக்கு அருகில் விமானத்தினூடாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமா என்பதை ஆராய MI-17 ரக ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர், குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்தார்.Advertisement