”மன்னாரில் புதிதாக 5 பேருக்கு கொரொனா”

 


ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடி தொடர்புடைய மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என பதில் அரசாங்க அதிபர் s.குணபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள அவர் பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள் மற்றும் வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கேட்டுள்ளார்.


Advertisement