கவுதம் மேனன் உள்ளிட்ட ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலாஜி தயார்!

 


தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - கவுதம் மேனன், சுதா கொங்கரா, சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன்


மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்து ‘புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் புதிய ஆந்தாலஜி படமாக ஐந்து குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள். இது அக்டோபர் 16 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ளthu புத்தம் புது காலை.


‘இளமை இதோ இதோ’ என்ற குறும்படத்தை - சுதா கொங்கரா இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) ஊர்வசி கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற படத்தை - கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார். எம்.எஸ். பாஸ்கர், ரீத்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ‘காஃபி, எனி ஒன்?’ படத்தை - சுஹாசினி மணி ரத்னம் இயக்கி நடிக்க, அவருடன் இணைந்து அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ரீயூனியன்’ என்ற தலைப்பிலான குறும்படத்தை - ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ஆண்டிரியா, லீலா சாம்சன் மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘மிராக்கிள்’ என்ற தலைப்பிலான கடைசி குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடித்துள்ளனர்.Advertisement