ஆலையடிவேம்பு பிரிவுகளிலும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டன

 


வி.சுகிர்தகுமார் 


  பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அற்ற சுற்றச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று துப்பரவு செய்யும் செய்ற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியின் வழிகாட்டலில் இடம்பெற்ற  இப்பணி மூலம் பெருமளாவான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் கழிவுகள் அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

கிராமங்கள் தோறும் சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் பைகளில் சேர்க்கப்பட்டு பிரதான வீதிகளுக்கு பொதுமக்களளால் எடுத்து வரப்பட்டன.

பின்னர் அங்கு சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபையின் உழவு இயந்திரங்களின் உதவியுடன் உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இப்பணிகளில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Advertisement