வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர், பார்வை சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன்  பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார். 
மேலும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்க துரித நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்; வாழும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
வீதிகளும் குடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 மூன்று தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில் சில குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.