”சவால்களை தேர்ந்தெடுப்போம்”



 வி.சுகிர்தகுமார் 0777113659  




  சவால்களை தேர்ந்தெடுப்போம் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் தம்பட்டை சுவாட் மண்டபத்தில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.

பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவி அனுசியா சேனாதிராஜா தலைமையில் இணைப்பாளர் வாணி சைமன் ஒருங்கிணைப்பில்; இடம்பெற்ற நிகழ்வுகளில் கல்விமான்கள் பல் சமூக தலைவர்கள் பெண்கள் ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

'அவளிற்கோர் அச்சமில்லா உலகை நோக்கி' எனும் ; கருப்பொருளில் ஆரம்பமான நிகழ்வுகளில் தீபங்கள் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவி அனுசியா சேனாதிராஜாவின் தலைமை உரையினை  தொடந்து துறைசார் வல்லுனர்களுடனான கலந்துரையாடலை வாணி சைமன் நெறிப்படுத்தினார்.

பின்னர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் நீதிக்கான சவால்களும் எனும் கருப்பொருளில் உளவள ஆலோசகர் ஜெயதீபா விளக்கமளித்தார். தொடர்ந்து கொவிட் காலப்பகுதியில் பெண்கள் எதிர்கொண்ட பால்நிலை வன்முறை மற்றும் சவால்கள் தொடர்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவி இலங்கேஸ்வரி விளக்கமளித்தார்.  

இதன் பின்னராக பெண்களின் கவிதை மற்றும் பாடல்களும் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மனித உரிமை செயற்பாட்டாளர் இசதீன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இனரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக குறிப்பிட்டார்.

இதேநேரம் பெண்கள் நீதியை பெறுவதற்கான சட்டவாக்கங்களும் சவால்களும் எனும் கருப்பொருளில் சட்டத்தரணி சுதர்சினி விளக்கமளித்தார். இறுதியாக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்  தொடர்பில் பொலிஸ் சாஜன் விஜிதா தெளிவுபடுத்தினார்.

இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் மூவினத்தையும் சேர்ந்த அதிகளவானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.