டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது


 பதுளை – பசறை பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தை அடுத்து, தலைமறைவாகியிருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பசறை பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்

- Advertisement -

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில்,  எதிர்த் திசையில் டிப்பர் ரக வாகனமொன்றும் பயணித்திருந்தமை சி.சி.டி.வி காட்சிகளின் ஊடாக தெரியவந்திருந்தது.

எனினும், சம்பவம் இடம்பெற்றதையடுத்து, குறித்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.