விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைப்பு

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதுடன் திருக்கோவில் பிரதேச விளையாட்டு மைதானங்களும் இந்த அரசாங்கத்தினூடாக அபிவிருத்தி செய்ய முடியும்; என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன் இந்த அரசாங்கத்தின் மூலமாக விரைவான தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வேண்டுகோளுக்மைவாக திருக்கோவில் இளம்புயல் விளையாட்டுக்கழகத்திற்;கான ஒரு தொகை விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இளைஞர்களின் விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்திலும் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெறவுள்;ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் இளம் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.